பொது விநியோகம் திட்டத்திற்கு பொதுமக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலை அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார், கோயம்புத்தூர் மண்டல காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு சென்னை மண்டல திரு சந்திரசேகர் அவர்களின் மேற்பார்வையில் நேற்று காலை 6 மணி அளவில் போலீசார் புழல் சிக்னல் அருகே ரெட்டில்ஸ் டோல்கேட் நோக்கி வந்த அசோக் லேலாண்ட் பார்ட்னர் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதில் 8000 கிலோ 8 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர் போலீசாரை கண்டவுடன் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் அவர் பெயர் ராஜேஷ் (48) விசாரணையில் இவர் சென்னை மூளை கடையை சேர்ந்த வசந்த் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்த நல்லாணி குமார் என்பவருக்கு கொடுக்க கடத்தி வாகனத்தில் ஏற்றி சென்றதாக தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வாகனத்தை பின்தொடர்ந்து மற்றொரு வாகனமும் ரேஷன் அரிசியை கடத்தி வருவதாக அவர் தகவல் கூறினார் இதனைத் தொடர்ந்து ஜிஎன்டி சாலை பால வாயில் சந்திப்பு அருகே ரெட் ஹில்ஸ் டோல்கேட் நோக்கி வந்த அசோக் லேலாண்ட் மற்றொரு வாகனத்தையும் போலீசார் பிடித்து சோதனை இட்டதில் 3000 கிலோ 3 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜா(45) என்கிற நாகராஜா என்பவரை கைது செய்து விசாரித்ததில் இரண்டு பேரும் கொடுத்த தகவலின் பெயரில் சென்னை மூலக்கடையைச் சேர்ந்த வசந்த் மற்றும் மாரியப்பன் ஆகியோரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர் ஆனால் அவர்கள் தலைமை தலைமறைவாக இருப்பது தெரியவந்தது இந்நிலையில் ஆய்வாளர் திரு தாம்சன் சேவியர் தலைமையில் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வரும் நிலையில் சூழூர்ப்பேட்டையைச் சேர்ந்த நல்லிகுமாரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வாகனம் ஓட்டி வந்த இரண்டு டிரைவர்கள் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 11 டன் ரேஷன் அரிசியை இரண்டு வாகன வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்
















