சென்னை புறநகர் ரெயிலில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி:

0
275

சென்னையில் வேலைப்பார்க்கும் நபர்கள் புறநகர் ரெயில் மூலமாகத்தான் வேலைக்கு வந்து செல்வது வழக்கம். ரெயில் சேவை முடக்கத்தால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் சேவை தொடங்கப்பட்டால் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக கூட வாய்ப்புள்ளதால் 9 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நாளையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரெயிலில் பயணம் செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆனால் கூட்டம் குறைவான நேரம் என கூறப்படும் NON PEAK HOURS நேரத்தில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் பயணம் செய்ய தடை தொடர்கிறது.

அனுமதிக்கப்பட்ட நேரம் தொடங்குவதற்கு முன்பாக டிக்கெட் வழங்கப்படும். பயணிகள் ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே டிக்கெட் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் யாரும் முகக்கவசம் அணியாமல் ரெயில் மற்றும் ரெயில் வளாகங்களுக்கு வரக்கூடாது என வலியுறத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here