திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட்கோட்டத்தில் உள்ள R.K.PET வட்ட காவல் நிலையங்களான பள்ளிப்பட்டு D5,பொதட்டூர்பேட்டை D6 மற்றும் R.K.பேட்டை D4 ஆகிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடந்து இரவு நேரங்களில் ஆளில்லா வீடுகளில் புகுந்து திருடியும் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடர்களை (20.03.2021) இன்று திட்டமிட்டு வலைவிரித்து பிடித்தது காவல்துறை.
பிடிபட்ட குற்றவாளிகள் நரிக்குறவர்கள் ஆவார்கள்.சென்னை குன்றத்தூர் முருகனின் மகன் அண்ணாமலை(30),மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கார்த்திகேயபுரம் மாணிக்கம் மகன் பாண்டியன்(29),மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா வடகுப்பம் பஞ்சாயத்து கொத்தரோடு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் மகாராசி(40) என்பவர்கள் இந்த திருட்டில் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு திருடி உள்ளனர்.இவர்களை பிடிக்க திட்டமிட்ட காவல்துறை மிகச்சாதுரியமாக இவர்களை அடையாளம் கண்டு சுற்றி வளைத்து கைது செய்தனர்.காவல்துறையின் சிறப்பு டீம் DSP ரவிச்சந்திரன் தலைமையில் INSPECTOR சுரேந்திரகுமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன்,பாஸ்கர்,சிட்டிபாபு,ராகவன் ஆகியோர் இணைந்து மிகச்சிறப்பாக குற்றவாளிகளை கைது செய்தனர்.திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனால் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பொதுமக்கள் மனநிம்மதி அடைந்தனர்.
காவல்துறையை மனதார பாராட்டினர்.














