நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்;

0
206

முதற்கட்டமாக 8.4.2022 அன்று 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு, நடமாடும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வ விநாயகம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here