போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பயிற்சி-ரூ.10 கோடியில் புதிய திட்டம்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு

0
567

எழும்பூர் – ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.காவலர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த புதிய அங்காடி போலீஸ் குடும்பத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும். காவலர்கள் பலர் மன அழுத்தத்துடனேயே பணிபுரிந்து வருகிறார்கள். ஆண்டுக்கு 300 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இவர்களில் தற்போது ரம்மி விளையாட்டு போன்றவற்றில் காவலர்கள் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம்.
காவல் பணி ஆபத்தான பணியாகும். பணி நேரத்தில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பணியின்போது நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றியும் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here