குடியாத்தம் அடுத்த ராமாலை காந்தி கணவாய் பகுதி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி இந்த பகுதியில் சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். அதோடு தங்கள் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் மேய்ச்சலுக்கு விடவும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் புதர்பகுதியில் பதுங்கி உறும்புவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஜெயக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மாடுகளை நிலப் பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு, விவசாய பணியை செய்துள்ளார் அப்போது, திடீரென கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்கவே ஜெயக்குமார் விரைந்து சென்று பார்த்துள்ளார் அப்போது கன்று குட்டியின் பின்பகுதியில் கடித்த குதறப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது இதை அடுத்து சிறிது நேரத்தில் கன்று குட்டி இறந்தது இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனசரகர் வினோபா மற்றும் வனத்துறையினர் கன்று குட்டியை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசினை முடிவு வந்த பின்பு சிறுத்தை தாக்கி கன்று இருந்ததா அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்கு தாக்கியதா என்று தெரியவரும் என வனத்துறையை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.














