வாய் தகராறு- கொலையில் முடிந்தது ;

0
221

சென்னை இராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவர் பெரம்பூர் வீனஸ் பகுதி ஆட்டோ ஸ்டாண்ட்யில் சேர்ந்து அங்கேயே சவாரி ஒட்டி வருகிறார்,ஆட்டோ ஓட்டுனர் செல்வம் சவாரிக்காக கொளத்தூர் அகரம் பகுதி நான்கு வழி சாலையில் உள்ள எஸ்,ஆர்,பி. கோயில் தெருவில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார் அவ்வழியே இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரான ரிக்காடோ என்கிற இளைஞர் தனது மகளை தனியார் பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது இடையூறாக நின்ற ஆட்டோ டிரைவரை ஒதுங்கும்படி கூறியுள்ளார்
சவாரி இல்லாதவர் மன உளைச்சலில் இருக்கிறேன் என தெரிவித்த ஆட்டோ டிரைவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திட்டிய போது இருவருக்கும் இடையே
வாய் தகராறு
நடந்துள்ளதாக கூறப்படுகிறது ,
பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த ரிக்காடோ என்பவர் செல்வம் என்ற ஆட்டோ டிரைவரை நெஞ்சில் அடித்ததால்
மயங்கிய நிலையில் சூழ்ந்துவிழ அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் ஏற்றி பெரியார்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் வரும் வழிலேயே ஆட்டோ டிரைவர் செல்வம் உயிரிழந்தார் என தெரிவித்ததும்பின்னர் உடல் கூறு ஆய்வுகாக சென்னை கே எம் சி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர் ,பின்னர் வழக்கு பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார் தாக்குதல் வழக்கு கொலை வழக்காக பதிவு செய்தனர் ,மேலும் தீவிர விசாரணையில் பிரிட்டிஷ் அயல் நாட்டைச் சேர்ந்தவர் ரெக்கார்டோ 35,(த.பெ. ராபின் ) என்பதும்
தற்காலிகமாக சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது பின்னர் போலீசார் விசாரணை நிறைவடைந்ததும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here