சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நற்கருணை ஆலயம் செல்லும் வழியில் மாதா சிலை உள்ளது இதனை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் இரும்பு கம்பியை வைத்து மாதா சிலையை அடித்து உடைத்தனர் இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் கூச்சலிட வே அவர்கள் தப்பித்து சென்றுவிட்டனர்
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் இன்று காலை மாதா சிலை உடைக்கப்பட்டது அறிந்த பொதுமக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் சிலையை உடைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்
சிலையை உடைத்த மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்














