ரமலான் பண்டிகை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் சோதனை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
நாளை ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனுடைய ரமலான் பண்டிகை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன
குடியாத்தம் பகுதியில் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் முக்கிய வழிபாட்டுத் தளங்களில் வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர்
மேலும் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டனர் மேலும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்














