சென்னை பழைய வண்ணாரப் பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்த வெங்கடேசன் வயது 50 என்பவர் அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார் நேற்று இரவு கடைக்குத் தேவையான பாத்திரங்களை எடுத்து வரும்போது கால் தவறி கீழே விழும்போது தாங்கி பிடிக்க ஸ்விட்ச் பாக்ஸ் பெட்டியில் கை வைக்கும்போது அது உடைந்து அதில் கைபட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிய வந்தது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன் என்பவரை விசாரித்து வருகின்றனர்















