உயர்திரு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் பெண்கள் சார்பாக ஒரு புகார் மனு…

0
494

உயர்திரு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு
பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் பெண்கள் சார்பாக ஒரு புகார் மனு;

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் ஐயா பள்ளிப்பட்டு பேரூராட்சி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்டது.பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு சொந்தமான மதுபான கடை எண் 9022 உள்ளது.இந்த கடை பள்ளிப்பட்டு பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கும் மற்றும் முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் இடமான கபர்ஸ்தானுக்கு,தர்காவிற்க்கும் மிக அருகில் உள்ளது.அரசு மதுபான கடைக்கு மிக அருகிலேயே தண்ணீர் டேங்கும் அமைந்துள்ளது.இந்த இடமே குடியிருப்பு சூழ்ந்த பகுதி ஆகும். அதாவது வீட்டுமனைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இந்த கடை அமைந்துள்ளது. இந்த இடத்தை தினமும் பெண்கள் கடந்து செல்ல வேண்டியுள்ளது.அங்கே மது அருந்துபவர்களில் பார்வைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் மிகவும் கூனி குறுகித்தான் செல்கிறார்கள் பெண்கள். மற்றும் அருகிலேயே பஸ் நிலையம் உள்ளது அதன் பின் பகுதியில் ஏரிக்கரை உள்ளதால் அங்கேயே மதுவை வாங்கி கொண்டு சென்று அங்கேயே அமர்ந்து குடித்து அந்த இடங்களிலேயே மது பாட்டில்கள் மட்டும் வாட்டர் பாக்கெட்டுகள் பான்பராக் என்று மேலும் பல பொருட்கள் ஆங்காங்கே குவியல் குவியலாக சிதறிக் கிடக்கின்றன.அதனுடைய புகைப்படங்களும் இங்கே பதிவேற்றம் செய்துள்ளோம். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்த மதுக்கடை அமையவில்லை. அவசரகதியில் கையூட்டு பெற்றுக்கொண்டு அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இதற்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு உள்ளது.ஆகவே தமிழக முதலமைச்சர் நல்லதே செய்வார் என்று பொதுமக்கள் கருதுவதால் மக்களின் நம்பிக்கைக்கு உரியவாறு தாங்கள் தீவிர நடவடிக்கை எடுப்பீர்கள் என்று பெண்கள் பொதுமக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.நல்லது நடக்குமா விரைவில்…

சமூக அக்கறையுடன்
S.சிவக்குமார்-பள்ளிப்பட்டு

திருவள்ளூர் மாவட்ட நிருபர்
K.S.திலீப்-பள்ளிப்பட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here