சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில்98 கிலோ கஞ்சா பறிமுதல்:

0
341

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே உள்ள மேம்பாலம் அருகில் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா வை சென்னையிலுள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வருவதாக வந்த இரகசிய தகவலின் பேரில் வடசென்னை துணை ஆணையர் சிவபிரசாத் அவர்களால் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டது

பழைய வண்ணாரப்பேட்டைமேம்பாலம் அருகே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் செயல்படுவதாக கருதி 35 வயது மதிப்புடைய நபரை போலிசார் விசாரித்தனர் விசாரணையில் அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மங்கராஜ் என்பதும் சென்னையில் அவர் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 26கிலோ கஞ்சாவை சென்னையில் உள்ள வ மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்

உடனடியாக அவரை கைது செய்து விசாரணை செய்ததில்

சென்னை காசிமேட்டு”பகுதியில் காசிபுரம் ஏ பிளாக்க சேர்ந்த சரண்ராஜ் என்கின்ற”சரண்”குமார் (24)

காசிமேடு இந்திராநகர் பகுதியை சார்ந்த லஷ்மி எ நொண்டி லஷ்மி (60)

திருவொற்றியூர் பகுதியை சார்ந்த கவிதா (35) ஆகியோர் மொத்த வியாபாரிகள் என தெரியவந்தது

உடனடியாக போலிசார் சோதனையில் ஈடுபட்டனர்

இந்த சோதனையில் சரண்ராஜின் வீட்டில் இருந்து 22கிலோ கஞ்சா”பறிமுதல் செய்யப்பட்டது
இவர் மீது ஏற்கனவே கொலை கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது

மேலும் லஷ்மி வீட்டில் நடந்த சோதனையில் 24கிலோ கஞ்சாவும்

கவிதா வீட்டில் 24கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது

கைது செய்யப்பட்ட இரு”பெண்
“குற்றவாளிகள் மீது ஏற்கனவே சில கஞ்சா வழக்குகள் உள்ளது என்பது தெரியவந்தது

கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

பின்னர் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வடசென்னை துணை ஆணையர் சிவபிரசாத் கூறுகையில்”

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில்”சென்னையில் கஞ்சா விற்பணை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதன் ஒரு பகுதியாக வடசென்னை சரகத்தின் சார்பில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது
பெரும்பாலான கஞ்சா போதை பொருட்கள் ஆந்திரா, ஒடிசா, விசாகப்பட்டிணம் போன்ற மாநிலங்களிலிருந்துசென்னைக்கு கடத்தி வரப்படுவதாக தகவல் வந்தது

இந்த தகவலின் பேரில் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைகளில்
ஒரு படை விசாகபட்டினம் சென்று அங்கேயே ஒருவாரத்திற்கும் மேலாக இருந்து

சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கும் கஞ்சாக்கள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது

அந்த தகவலின் பேரிலேயே

விசாகப்பட்டிணத்தை சேர்ந்த மங்கராஜ் என்பவர் 26கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார் என்றும்

அவர் மூலம் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் யார் யாருக்கு அவர் விற்பனை செய்கிறார் என்று விசாரித்ததின் பேரிலேயே மற்ற மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்
கஞ்சாக்களின் மதிப்பு சுமார்
12இலட்சம் என்று தெரியவந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here