






அருள்மிகு ஸ்ரீ வேத விநாயகர் ஆலயம் மேற்கு மாட வீதி திருவொற்றியூரில் அமைந்துள்ள இந்த ஆலயம் 2800 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.ஆதிசங்கரர். ரமண மகரிஷி. வள்ளலார் மற்றும் எண்ணற்ற மகான்கள் வழிபட்ட அருள்மிகு ஸ்ரீ வேத விநாயகர் ஆலயம் 14-02-2025 அன்று கும்பாபிஷேக முதல் நிகழ்ச்சியாக கணபதி ஹோமம் லக்ஷ்மி ஹோமம் வாஸ்து சாந்தி கலா கரிசனம் பூர்ணா மற்றும் மற்றும் மங்கள இசை உடன் நிகழ்ச்சி துவங்கியது. விழாவின் கடைசி நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை 16-02-2025 மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்கள்.. ஏராளமான பொதுமக்கள் விழா குழுவினர்கள். மற்றும் பத்மபுர மாணவர் சங்கத்தினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.. திருப்பணி மற்றும் மகா கும்பாபிஷேக விழா ஏற்பட்டினை சென்னை வன்னியர் குல சத்திரியர் மகா சங்கமும் மற்றும் திருவெற்றியூர் நகர வன்னிய குல சத்ரியர் அறக்கட்டளையும் இணைந்து சிறப்பாக நடத்தினர்..














