-
காந்தி மார்க்கெட்டில் நேற்று (05.02.2025)இரவு 9:45 மணி அளவில் சுமை பணி தொழிலாளர்களுக்கும் சில போதை ஆசாமிகளுக்கும் நடந்த தகராறின் எதிரொலியாக 60க்கும் மேற்பட்ட போதை ஆசமிகளால் காந்தி மார்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் வியாபாரிகளின் கடைகள் பொருட்கள் என்று ஒட்டுமொத்தமாக சூறையாடபடிருக்கிறது
SDPI வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா தலைமையில் காவல்துறை துணை ஆணையர் அவர்களை சந்தித்து புகார் புகார் மனு அளித்தனர் வர்த்தக அணி மாவட்ட தலைவர் பக்ருதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர் தளபதி அப்பாஸ் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா உடன் இருந்தனர்.
காந்தி மார்க்கெட் ஒவ்வொரு நுழைவாயிலும் இரண்டு காவல் துறை அதிகாரிகளே தொடர்ச்சியாக பணி அமர்த்த வேண்டும்
காந்தி மார்க்கெட் அருகில் இருக்கும் மது கடையை நிரந்தரமாக எடுக்க கோரியும் முழுவதும் சிசிடிவி கேமரா பழுது பார்த்து சரிவர இயங்குவதை உறுதி செய்யக் கோரியும் காவல்துறை துணை ஆணையரிடம் மனு அளித்தனர்
பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நீதி கேட்டு அனைத்து வியாபார சங்கங்களினுடைய நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்














