எங்கள் வடசென்னை மந்திரியின் நினைவு நாள். சில நினைவுகளோடு:

0
162

..

திருவொற்றியூர் தொகுதி
சட்டமன்ற திமுக உறுப்பினரும், 2006-11 வரையில் தமிழ்நாடு மீனளத்துறை அமைச்சருமாக
இருந்த திரு.கே.பி.பி.சாமி
என்கிற கே.பி.பெரியசாமியின் மரணம், பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்,
எனக்கு இல்லை.

திமுக ஆட்சி முடிந்த கையோடு, அதிகாரத்தின் கோரப் பிடியில் அதிகம் நசுக்கப்பட்ட
குடும்பங்களில் கேபிபி சாமியின் குடும்பம், முக்கியமானது !

சாமிக்கு முன்னரே அரசியல் அதிகாரத்தைப் பிடித்த அவர் மனைவி உமாசாமி (கவுன்சிலர்), அதற்கு முதல் பலி ஆனார்.

அடுத்தபலி,
கேபிபிசாமியின் மகன்.
இரண்டு உயிர்களை அடுத்தடுத்து பறி கொடுத்தார் சாமி.

நள்ளிரவில் சாமி வீட்டுக்குள் நுழைந்த போலீஸ், முதல் வேலையாக சாமியின் தெரு,
வீட்டின் முகப்புகளில் இருந்த
சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு,
பத்தாம் வகுப்பு மாணவனான சாமியின் மகனை கொத்தாகத் தூக்கிக் கொண்டு போய் காவல்நிலையத்தில் வைத்து
விடிய விடிய விசாரித்தது !
பல ரகசியங்களை (?)
அவர் மூலம் கறக்கப் பார்த்தது.

சாமியின் தம்பிகளையும்
விட்டு வைக்க வில்லை…

சாமியை போலீஸ் சேஸ் செய்யுமளவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான நேரடி புகார்தாரர் யாரும் இல்லை என்பதையும்
சிசிடிவி கேமரா
நொறுக்கலையும்
நக்கீரனில்
ஆதாரத்துடன் பதிவிட்ட
மாபெரும் குற்றத்தை செய்த வகையில்
நானும் விரட்டப் பட்டேன், மறைமுகமாக
மிரட்டப் பட்டேன்.

திரு. டி.சி.விஜயன்,
உடல் நிலையையும் பொருட்படுத்தாமல்,
அந்த நள்ளிரவில்
காவல் நிலையம் வந்து
நியாயம் கேட்டு
குரல் கொடுத்தார்.
ஆரோக்கியமான
உடல்நிலையுடன் இருந்த
சாமிக்கே இந்த கதி என்றால், டிசிவிஜயனின் குரல் எடுபடுமா என்ன ?

இப்படி அடுத்தடுத்து சாமியின் குடும்பத்தின் மீது நிகழ்த்தப் பட்ட தாக்குதலில் ஒட்டுமொத்தக் குடும்பமும், உறவுகளும் நாலாபுறமும் சிதறியது.

எந்த வீட்டு வாசலில்
சாமிக்கு சல்யூட் அடித்து பாதுகாப்புக்கு போலீசார் நின்றார்களோ,
அந்த வீதி பக்கம் கூட
சாமி வந்து விடாதபடி
நாள்கணக்கில்
பார்த்துக் கொண்டது
அதிகார மையம்.

…சிலரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார், பஞ்சாயத்து செய்தார், ஊர் மக்களிடையே பிரிவினையை உண்டுபண்ணி கலகத்தை உண்டாக்கினார், சீரான சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்… என்றெல்லாம் சாமி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டது…

சாமி இறந்தபோது
அவர்உடல்மீது
விழுந்து கதறிய மீனவக்
குப்பத்து மக்களின் எண்ணிக்கையும், கதறி அழமுடியாமல்
வாய் பொத்தி நின்ற கட்சிக்காரர்களின்
எண்ணிக்கையும்,
சாமி மீதான குற்றச் சாட்டுகள் அத்தனையும், அக்மார்க் பொய் என்பதைக் காட்டி விட்டது.

வெயிட் லிப்டர் போல் ஆரோக்கியமாக இருக்கும்
ஒருவனை காசநோயாளிக் கணக்கில் மரணப் படுக்கையில் தள்ளிக் கொல்ல, மிகச் சிறந்த ஆயுதம், பழிவாங்கும்
அரசியலன்றி
வேறொன்று உள்ளதா தெரியவில்லை.

சாமி குறித்த மற்ற செய்தியாளர்களின்
அனுபவம் பற்றி எனக்குத் தெரியவில்லை…

ப்ளீஸ் சேது சார்,
(அல்லது அண்ணே)
நாளைக்கு கொஞ்சம்
வந்துட்டுப் போக முடியுமா, கனிமொழிம்மா வர்றாங்க,
கொஞ்சம் கவரேஜ்
பண்ணனும்…
தளபதி வர்றாருண்ணே,
கொஞ்சம்
ரிப்போர்ட்டர்களுக்குத்
தகவல்
கொடுத்துடுங்கண்ணே”…

இதுதான் அமைச்சர் கே.பி.பி. சாமி !

”சார், அல்லது அண்ணா”
இவ்வளவுதான் அவர் வார்த்தை…

#மிஸ்யூசார்_மிஸ்யூஅண்ணா

(ந.பா.சேதுராமன் -27.02.2023)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here