ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் 42 வது ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது:

0
80

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக்
கல்லூரியில் 42 வது ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு மாணவர் கௌசிக்,
வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் B.R.ரமேஷ் பாபு, ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் D.சரவணன் மற்றும் ஸ்ரீராம் வித்யாமந்திர் பள்ளி முதல்வர் S.S.ஸ்ரீனிவாசன் ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்

சிறப்பு விருந்தினராக Digiedze Soft Solution Pvt. Ltd நிறுவனத்தின், அசோசியேட் டைரக்டர் பூபதி துரைவேல், கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி
சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் V.தத்தாத்ரேயா
ஆண்டறிக்கை வாசித்தார். மூன்றாம் ஆண்டு மாணவி M.வினிதா நன்றியுரை ஆற்ற நாட்டுப்பன்னுடன் விழா இனிதே நிறைவுற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here