வேலூர் மாவட்டம் குடியாத்தம்.
நகைகளை திருடிய சகோதர்கள், அதை வாங்கி விற்ற மற்றோரு சகோதரர்கள் என 6 பேர் கைது. அவர்களிடம் இருந்து உருக்கிய நிலையில் 48 சவரன் தங்க நகை மீட்பு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகோவில் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ், இவரது வீட்டில் கடந்த 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டை உடைத்து 55 சவரன் தங்க நகைகள் திருடி போயுள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டு நவம்பர் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த கேஸ் கம்பெனி உரிமையாளர் தண்டபாணி என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 57 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டு மே மாதம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்த பூனம் என்பவரின் வீட்டை உடைத்து 12 சவரன் என மொத்தம் 124 சவரன் நகை திருடு போயுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குடியாத்தம் நகர காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காவல் துறையினர் குடியாத்தம் நகர பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஜலில்(55), அகமது பாஷா(31), அசாம் பாஷா(21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில் கடந்த காலங்களில் நடைபெற்ற 3 திருட்டில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் காவல் துறையினரின் தொடர் விசாரணையில் இவர்கள் திருடும் நகையை குடியாத்தம் சந்தை பேட்டையில் உள்ள நகை கடை உரிமையாளர்களும் சகோதர்களுமான அபய் குமார், ராஜேஷ் குமார், நவரத்தன் விற்று பணம் பெற்று வந்தது தெரியவத்தது. இதனையடுத்து நகை கடை சகோதரர்கள் 3 பேரையும் கைது செய்ய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் மோசஷ் பிரவீன் குமார் காவலர்கள் அவர்களிடம் இருந்து உருக்கிய நிலையில் சுமார் 48 சவரன் நகைகளை மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட திருட்டில் ஈடுபட்ட சகோதரர்கள் 3 பேர், திருட்டு நகையை வாங்கிய நகை கடை சகோதரர்கள் 3 பேர் என 6 பேர் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர்.















