திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த பொம்மநாயக்கன்பட்டி சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது சொத்தான விவசாய நிலம் 4 ஏக்கர் 8 சென்ட் நிலத்தை சுப்பிரமணி மகன்கள் பாலகிருஷ்ணன், மெளன குருசாமி ஆகியோர் வேலுச்சாமி மகள் ராஜவேணி மகள்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்களை கொண்டு வெள்ளியங்கிரி என்பவர் மூலம் ஒய்வு பெற்ற B, D.0 மனோகரன், விஜய பாபு. கருணகரன், சுமித்ரா. ஆகியோருக்கு விற்றுவிடுகிறார்கள் இது தெரியாமல் பேத்திகள் மோகனா, ரேணுகா, சுலேச்சனா ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர் இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன் குடுபத்தினர் விளை நிலத்தில் பயிர்களை அழித்து நாசம் செய்து அங்கிருந்த சாலையை தீயிட்டு ரகளை செய்து வந்துள்ளனர் மேலும் வெளி ஆட்களை கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இந்த நிலத்தை சுமார் 40 ஆண்டுகளாக வேலுச்சாமி பெயரில் இருந்துள்ளது பின்பு 4/2/2001அன்று அவர் இறந்துவிடுகிறார் அதன் பின் பேரன்கள் பேத்திகளுக்கு தெரியாமல் விற்றது தெரிந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் SP அலுவல்கத்தில் புகார் கொடுத்துள்ளனர் இது குறித்து தாராபுரம் டி.எஸ், பி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். வேலுச்சாமி நாயக்கர் 1982 ஆண்டு முதல் 2020 வரை தனது பெயரில் நிலத்தை பத்திரப்பதிவு இருந்துள்ளது என வேலுச்சாமி பேத்திகள் தெரிவித்துள்ளனர் ஆனால் வேலுச்சாமியின் பேரன்கள் போலி ஆவணங்களைக் கொண்டு நிலத்தை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது இதனால் மேல் விசாரணைக்கு வருவாய் கோட்டாட்சியர் சென்று மனுக்கள் கொடுக்கும்படி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வருவாய் கோட்டாட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டு 15 நாட்கள் கழித்து விசாரணைக்கு வரச் சொல்லி அனுப்பி உள்ளனர் இந்நிலையில் நிலத்தை வாங்கிக் கொடுத்தவர் வெள்ளிங்கிரி இது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது போல் கூறிச் சென்று உள்ளார் தற்போது வெள்ளிங்கிரி தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் தேடி வருகின்றனர் இதில் பத்திரப்பதிவில் மோசடி செய்த திருப்பூர் மாவட்ட பதிவாளர் இரா ராமசாமியிடம் மீண்டும் மனு கொடுத்தபோது ஆவணங்களை சரி பார்க்காமல் கையெழுத்திட்டு முறைகேடு செய்ததாக வேலுச்சாமி மகள் ராஜவேணி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் தமிழக முதல்வரும் தகுந்த நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்















