சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை, மேலும் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் கட்டாயம் நீக்கப்படுவார்கள் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
சென்னை ராயபுரத்தில், அதிமுக பொன்விழா ஆண்டையொட்டடி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கட்சி கொடியினை ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என புகழேந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும், புகழேந்திக்கெல்லாம் பதில் கூறத் தேவையில்லை என்றார்.
ஆட்சியில் இருக்கும் பொழுது வீர வசனம் பேசுவார்கள், ஆனால் ஆட்சியில் இல்லாத போது ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி ஏந்தி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இருந்தவர்கள் திமுகவினர்.
அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடலாம்.
ஆனால் ஆளுநர் மீது கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸ் மூலம் கடும் விமர்சனம் வைத்தது.
பச்சோந்தி தனமாகத்தான் திமுக செயல்படும்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது.150 நாட்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் செயல்படுத்த வில்லை. தனித்துறை, மக்களிடம் வெள்ளை அறிக்கையாக வெளியிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் செயல்படுத்த வில்லை என்றார்.
போலியான அரசாங்கம் மக்களை வஞ்சிக்கும் அரசாங்கமாகவே தற்போது திமுக அரசு நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை தீர்மானம் நிறைவேற்றி நீக்கிவிட்டோம். மேலும் அவருடன் தொடர்பில் இருப்பவர்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளோம் இதற்காக கிளை அமைப்பில் இருந்து மாவட்ட கழகம் வரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா நீக்கப்பட்டுள்ளார்.
நேற்றும் இதே நிலை, இன்றும் இதே நிலை, நாளையும் இதே நிலை தான்.
தொண்டர்களின் வியர்வை, ரத்தம் உழைப்பால் உருவானது தான் அதிமுக. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது இது ஒரு எஃகு கோட்டை ஆகும்.
சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை, மேலும் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் கட்டாயம் நீக்கப்படுவார்கள் என்றார்.
ஒருங்கிணைப்பாளர் கருத்துக்கு நான் எதிர் கருத்து தெரிவிப்பது சரியில்லை.
சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டையில் அழகிய நிலையில் வழங்கியது குறித்து பேசுகையில், சத்துணவு திட்டதை சரியாக செயல்படுத்த வில்லையென்றால் பொது மக்களை திரட்டி போராடுவதற்கும் அதிமுக தயங்காது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் தம்பி டிடிவி தினகரனை நேரில் சந்தித்து உள்ளார். அவரை கட்சியில்இருந்து நீக்கிவீர்களா என்ற கேள்விக்கு, கட்சி தலைமை இதனை பார்க்கிறது என்றார்.













