புது வண்ணாரப்பேட்டையில் மர்மநபரால் ஒருவர் குத்தி கொலை,

0
277

 

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் மற்றொருவரை பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பீட்டர் என்பவர் படகில் பயன்படுத்தக்கூடிய நைலான் கயிறு செய்யும் வேலை பார்த்து வருகிறார் இந் நிலையில் நேற்று இரவு(31-7-21) புதுவண்ணாரப்பேட்டை AE கோவில் தெரு வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவருக்கும் பீட்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து மர்மநபர் ஆத்திரத்தில் அருகிலுள்ள பாட்டிலால் பீட்டரை குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் பீட்டரை மீட்பதற்குள் ரத்தவெள்ளத்தில் பீட்டர் அங்கேயே உயிரிழந்தார் இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here