விருப்ப இடமாறுதல் பெற விரும்பும் ஊழியர்கள், ஜனவரி 1 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில் 85 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மனுக்கள் பெறப்படும்.அடுத்த ஆண்டில் விருப்ப இடமாறுதல் பெற விரும்புவோர், அதற்கான இணையதளத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
வேலைக்கு சேர்ந்து ஐந்து ஆண்டுகளான பின் தான் இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை, ஓராண்டாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதனால், இந்த முறை அதிகம் பேர் விண்ணப்பிப்பர் என தெரிகிறது.














