வாய்த் தகராறில் ஏற்பட்ட பிரச்சனை கொலையில் முடிந்தது*

0
315

 

 

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் மற்றொருவரை டியூப் லைட்டால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பீட்டர் என்பவர் படகில் பயன்படுத்தக்கூடிய இரும்பு கயிறு செய்யும் வேலை பார்த்து வருகிறார் இந் நிலையில் நேற்று இரவு(31-7-21) புதுவண்ணாரப்பேட்டை AE கோவில் தெரு வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவருக்கும் பீட்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து மர்மநபர் ஆத்திரத்தில் அருகிலுள்ள டியூப் லைட்டை எடுத்து உடைத்து பீட்டரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார் ரத்த வெள்ளத்தில் துடித்த பீட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்

பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து வின்சென்ட்டை கைது செய்தனர் சாலையில் நடந்து செல்லும் போது வின்சென்ட் மற்றும் பீட்டருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த வின்சென்ட் அருகில் இருந்த டியூப் லைட்டால் பீட்டரை குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இதனைத் தொடர்ந்து வின்சென்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here