கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் பொது மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

0
261

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்
குழந்தைகளுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை வார்டினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதலாவதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) உற்பத்தி நிலையம் மற்றும் திரவ நிலை மருத்துவ பிராணவாயு கொள்கலன் ஆகியவற்றை பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் சுப்ரமணியன் சேகர் பாபு, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். பின்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கோவிட் 19 குழந்தைகள் பிரத்யேக வார்டு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்து பார்வையிட்டனர். பிரத்யேக கொரோனா வார்டில் 100 சாதாரண படுக்கைகள் மற்றும் 40 அவசர சிகிச்சை படுக்கைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிவறையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பொது மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் குழந்தைகளுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here