*.*
ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட
எம். எஸ்.கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு கல்மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் ரிக் ஷா வில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்க்கு ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
இது வரை ராயபுரம் தொகுதியில் உள்ள 520 தெருக்களில் பத்து நாட்களில் என்னுடைய ரதமான சைக்கிள் ரிக் ஷா வில் அமர்ந்து வாக்கு சேகரித்துள்ளேன் எனவும் இன்றுடன் என்னுடைய பிரச்சாரம் நிறைவு பெறுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை பக்குவம் இல்லாமல் பேசி வருவதாகவும் அவர் ஒரு பச்சிளம் குழந்தை போல் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
திமுக வின் நட்சத்திர போச்சாளர் ஆர் எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன் எனவும் அவருடைய கட்சிக்கு ஒரு பின்னடைவு என்றும் அது தேர்தலில் பிரதிபலிக்கும்.
வருமான வரி துறைக்கு வரும் தகவலின் படி தான் சோதனை செய்கிறார்கள்.
மடியில் கணம் உள்ளதால் தான் திமுக வினர் பயப்படுகிறார்கள்.
ஊழலில் ஊறிய கட்சி திமுக என்றும் குற்றம் சாட்டினர்.
உதயநிதி ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதி போல் பேசவில்லை ஒரு பச்சிளம் குழந்தை போல் பேசி வருகிறார்.
ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் 100 கோடி ரூபாய் வரை தேர்தலில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கிழக்கு கல்மண்டபம் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடையில் அமர்ந்து இளநீர் வெட்டி வாக்கும் சேகரித்தார்.
















