செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்ப முயன்ற ஆசாமி பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு;

0
432

திருவொற்றியூரில் பேருந்தில் இருந்து இறங்கியவரை பின்தொடர்ந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்ப முயன்ற போதை ஆசாமி பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

சென்னை திருவொற்றியூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்த ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் செயின் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய போதை ஆசாமியை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சென்னை பாரிமுனையில் இருந்து மணலி நோக்கி சென்றுகொண்டிருந்த தடம் எண் 56d பேருந்து மாட்டு மந்தை மேம்பாலம் அருகே சென்றபோது ரயில்வே பெண் ஊழியர் தவமணியின்(51) கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு போதை ஆசாமி ஒருவர் ரயில்வே இருப்பு பாதையில் ஓடியுள்ளார்
தவமணி கூச்சலிட வே உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் இருந்தவர்கள் விரட்டி சென்று போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் உதவி ஆய்வாளர் காதர் மீரா மற்றும் காவலர்கள் போதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்

பின்னர் விசாரணையில் தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்த நவீன்குமார்(41) என்பதும் குடிபோதையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பட்டப்பகலில் பொதுமக்கள் நிறைந்த பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here