பணம் நகை திருடிய தம்பதி கைது.

0
8

மூலனூரில் தேன் எடுப்பது போல, பூட்டிய வீட்டை நோட்டமிட்டு பணம் நகை திருடிய தம்பதியினர் கைது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்டம் , மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
செம்மாண்ட கவுண்டன்புதூர் தோட்டத்து சாலையில், பகல் நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பூட்டிய வீடுகளில் நோட்டமிட்டு பணம், நகை ஆகியவற்றை திருடி செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்பட்டனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மூலனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் Iஉத்தரவுப்படி, தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், மூலனூர் காவல் ஆய்வாளர் கோவர்தன அம்பிகை ஆகியோர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பாலமுருகன், தலைமை காவலர்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வன்,
ஊர்க்காவல் படை வீரர் காளிராஜ் ஆகியோர் கொண்ட குழுவுடன் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடப்பட்டனர்.

இதில், பல்வேறு இடங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை இரவு பகல் பாராமல் தேடும் பணியில் ஈடுபட்டதில், திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி, ஆழாம்பட்டி, நடுத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சக்திவேல் வயது (28), அதே மாவட்டத்தை சேர்த்த நத்தம், பெருமாள் என்பவரது மகள் வெள்ளையம்மாள் வயது (50) ஆகிய இரண்டு பேரும் திருடியது தெரியவந்தது. இவர்களை மேலும் பழைய குற்றவாளிகளுடன் மேட்ச் செய்த போது, ஒரு வருடத்திற்கு முன்பு அம்பளிக்கை, குத்திலூப்பு என்ற தோட்டத்து சாலையில், நடந்த பகலில் வீட்டை உடைத்து 30 பவுன் நகைகளை திருடிய வழக்கில் ஈடுப்பட்டது விசாரணையில், ஒப்புக் கொண்டனர். மேலும் இவர்களிடமிருந்து திருடிய சொத்துக்கள் 2 சவரன் நகையை மீட்கப்பட்டது.

மேலும் குற்றவாளிகளைகைது செய்து வழக்குச் சொத்தினை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.இந்த வழக்கினை கண்டுபிடிக்க உதவிய மாவட்ட தனிப்பிரிவு சைபர் செல் காவலர்கள், சமயத்தில பெற்றுத் தந்த சைபர் பிரிவினருக்கு மூலனூர்
ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here