அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி தீவிர வாக்குச் சேகரிப்பு:

0
8

மக்களின் குறைகளைத் தீர்ப்பதே முதல் கடமை என உறுதி.
ஆர்.கே. நகரில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி தீவிர வாக்குச் சேகரிப்பு:
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 38-வது மத்திய வட்டம், நேதாஜி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 1 முதல் 6 தெருக்களில் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இன்று காலை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது, அண்ணா தி.மு.க-வின் தேர்தல் துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
பிரச்சாரத்தின் போது மக்களிடையே உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:
​”தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சிக்கு இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெறவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அ.தி.மு.க பாடுபடும். குறிப்பாக, மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதையே எனது முதல் கடமையாகக் கொண்டு செயல்படுவேன்,” என உருக்கமாக உறுதி அளித்தார்.
பிரச்சாரத்தில் ஆர்.நித்தியானந்தம், பி.வெங்கடேசன், முத்துசெல்வம் ஐயப்பா எஸ்.வெங்கடேசன், எஸ்.நரேஷ்குமார், வேல்முருகன், பி.கோவிந்தராஜ், இராமமூர்த்தி எஸ்.சுயம்பு, ஜி.எம்.பாலாஜி, பி.கோவிந்தன் பரணிகுருக்கள், மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here