கும்மிடிப்பூண்டியில் நிரந்தர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்ககோரி வாகன உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்:.

0
177

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் அப்புறப்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், கல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 26 க்கும் மேற்பட்ட கழிவுநீர் வாகனங்களை நிறுத்தி வைத்து வழக்கறிஞர் சம்பத் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் கூறுகையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்லப்படும் மனித கழிவு நீரினை அப்புறப்படுத்த அரசு எங்களுக்கு பூந்தமல்லி திருமழிசை பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து அப்புறப்படுத்த உரிமை வழங்கி உள்ளது, இந்நிலையில் கழிவு நீரினை பொதுமக்களிடமிருந்து சேகரித்து செல்லும் போது கூடுதலான கட்டணம் செலவாகிறது இதனால் எங்களுக்கு இழப்பீடு ஏற்படுவதாக கூறி கும்மிடிப்பூண்டி பகுதியிலேயே கழிவு நீரினை அப்புறப்படுத்த அரசு சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்து மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும் இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த விதமான பயனும் இல்லாத நிலையில் பொய் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தனர் இதில் கும்மிடிப்பூண்டி வட்டார கழிவுநீர் வாகன நல சங்கத்தினர் தலைவர் ராமலிங்கம், செயலாளர் கோபி ,துணைத் தலைவர் ரவி,உள்ளிட்ட 26 வாகனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here