2000 பயனாளிகளுக்கு மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கினார்;

0
57

வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதவரம்  மற்றும் திருவற்றியூர் தொகுதியில் சுமார் 2000 பயனாளிகளுக்கு மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்புத் திட்ட  துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பட்டா வழங்கினார் மேலும் அதைத் தொடர்ந்து சக்திபுரம் விம்கோ நகரில் இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைத்த நிகழ்வில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்கள்,மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களுடன் இணைந்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர். கலாநிதி வீராசாமி MP அவர்கள் கலந்து கொண்டார் .

இந்நிகழ்வில் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் , திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர்ஜேஜே.எபினேசர்,சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார்,திருவொற்றியூர் 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசுஅரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here