சென்னை -கொருக்குப்பேட்டையில் தன்னுடன் பழகி மீண்டும் மனம் திருந்தி கணவனுடன் சென்று வசித்த பெண்ணை தன்னுடன் மீண்டும் அனுப்பாவிட்டால் ஆசிட் வீசுவேன் என மிரட்டிய இளைஞட், கணவருக்கு தனிமையில் இருந்த ஆபாச படத்தையும் அனுப்பி மிரட்டல் விடுத்த நிலையில் மனைவி அளித்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொருக்குப்பேட்டை, அவுசிங் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (29),எம்.சி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜானகி(24), என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன.
கொருக்குப்பேட்டை, ராதாகிருஷ்ணன் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் வினோத்(33). இவருக்கும் ஜானகிக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்தவர்கள் பிரச்சினை பெரிதானதால் வினோத்துடன் ஜானகி ஓடிவிட்டார். கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் வினோத்துடன் வசித்து வந்தார்.
வினோத்தின் நடவடிக்கை பிடிக்காமல், ஜானகி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், தான் திருந்தி விட்டதாக கூறி, கணவரிடம் திரும்பி வந்தார், கணவரும் மனம் திருந்தி வந்த மனைவியை பிள்ளைகளுக்காக ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், வினோத், தான் தனிமையில் இருந்த சில ஆபாச காட்சிகளை, பழனிசாமியின் செல்போனுக்கு அனுப்பி, உன் மனைவி ஜானகியை என்னுடன் அனுப்பிவை என மிரட்டியுள்ளார். மேலும், பழனிசாமியின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி ஜானகியின் கையைப்பிடித்து இழுத்து, தன்னுடன் வரவில்லை என்றால். முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியுள்ளார்.
கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,














