திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்; தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ;

0
324

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறுப்பு முதலில் திருமணிகுட்டி காதலை ஏற்க விஜயா மறுத்துள்ளார். இதனையடுத்து திருமணிகுட்டியின் காதலை ஏற்றுக் கொண்ட விஜயாவும் திருமணி குட்டியை காதலிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். பிரச்சனை இவர்களில் காதலில் பிரச்சனை இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் விஜயாவை தருமணிகுட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். மேலும் நாம் திருமணம் செய்து கொண்டதை யாரிடம் சொல்லக்கூடாது என்று விஜயாவிடம் சத்தியம் பெற்றுள்ளார். தன்னை தீவிரமாக காதலித்த காதலன் மீது நம்பிக்கை கொண்ட விஜயா இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். திருமணிகுட்டி ஆனால் திருமணிகுட்டி விஜயாவை எப்படியாவது ஏமாற்றம் திட்டத்தில் இருந்துள்ளார். திருமணம் முடித்ததும் திருமணி குட்டி விஜயாவும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து தொலைபேசியில் பேசியும் வந்துள்ளனர்.இந்த நிலையில் விஜயாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் விஜயா தான் காதலிப்பது பற்றும் , ரகசிய திருமணம் செய்து கொண்டு பற்றியும் வீட்டிற்கு தெரியப்படுத்தியுள்ளார். திருமணிகுட்டி இதை விஜயா குடும்பத்தினர் திருமணிகுட்டியிடம் காதல் விவகாரம் பற்றி கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த திருமணிகுட்டி விஜயாவிடம் நாம் காதலிப்பது யாருக்கும் சொல்லக்கூடாது என்று தெரிவித்தேன் எப்படி வீட்டில் சொல்லலாம் என கூறி விஜயாவை அதிகாரபூர்வமாக திருமணம் செய்ய முடியாது என தவிர்த்து வந்துள்ளார். இதனால் விஜயா குடும்பத்தினர் விஜயாவை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர். பரிதாபம் குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் விஜயா திருமணி குட்டியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். ஆனால் திருமணி குட்டியோ விஜயாவிற்கு அடைக்கலம் கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார். இரண்டு வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் விஜயா நடுத்தெருவுக்கு வந்துள்ளார். திருமணி குட்டி தன்னை கண்டு கொள்ளவில்லை என்பதால் விஜயா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் இருவரையும் அழைத்து பேசி உள்ளனர். தர்ணா ஆனால் திருமணி குட்டி தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருமணி குட்டிக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்த விஜயா இன்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இன்று விஜயா காதலன் திருமணிகுட்டி வீட்டின் முன்பு கொட்டும் மழையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here