கோவின் இணையதளத்தில் ஒன்றிய அரசு மாற்றம்-தடுப்பூசி போட்டவர்கள் யார்? எல்லாரும் தெரிந்து கொள்ளலாம்:

0
294

கோவின் இணைய தளத்தில் தடுப்பூசி நிலை குறித்து யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அனைத்து விமான போக்குவரத்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகள், சந்தைகள், பொழுதுபோக்கு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கவலை அளித்துள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள தனிநபர்களின் விவரத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய வகையில், கோவின் இணைய தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதனைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள், ஐஆர்சிடிசி உள்ளிட்ட அரசு அமைப்புகள், தங்களிடம் வருபவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? இல்லையா? என இனிமேல் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். கோவின் செயலியில் தனிநபர்களின் மொபைல் எண், பெயரைப் பதிவு செய்த பிறகு வரும் ஓடிபி.யை கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் தடுப்பூசி போட்டுள்ளாரா? என்பது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக அறிந்து அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கி வருகிறது. தற்போது, தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களிடம் குறைந்து வருவதால், தடுப்பூசிகளின் கையிருப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாநில அரசுகளிடம் 21.65 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here