சென்னை மணலியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மணலி எஸ்ஆர்எப் ஜங்ஷன் அருகே மணலி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணகி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயங்கர வேகத்துடன் தணிக்கையில் நிற்காமல் சென்றனர் விரட்டிப் பிடித்த போலீசார் அவர்களைச் சோதனை மேற்கொண்டதில் ஆளுக்கு ஒருவர் பட்டாக்கத்திகளை வைத்திருப்பது தெரியவந்தது
இதில் கௌரி சங்கர் சதீஷ் கார்த்திக் ஆகியோர் கையில் தலா ஒரு நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருக்கின்றனர்
உடனடியாக அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டி அனைத்தையும் தயார் செய்து வைத்து சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்
மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்த ஹரி என்ற கௌரி சங்கர் பொன்னேரி சேர்ந்த சதீஷ் என்ற சண்ட சதீஷ் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பசுபதி வண்டலூர் பகுதியை சேர்ந்த செல்லா என்ற செல்வகுமார் காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த குகன் ராஜா மாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 கத்திகள் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்
6 ரவுடிகள் மீது வழிப்பறி கொலை முயற்சி கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் எல்லைப்பகுதியான மணலியில் தொழிற்சாலைகள் நிறைந்த வழித்தடங்களில் வெடிகுண்டுகளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது














