கொருக்குப்பேட்டை புத்தா செட்டி தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி இவரது மகன் சூர்யா (வயது 20). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5வது தெரு சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீடு கொருக்குப்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ளது பாட்டி வீட்டிற்கு சிறுமி அடிக்கடி சென்று வருவார். அப்பொழுது சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மகளிர் போலீஸார் சூர்யாவை அழைத்து விசாரணை நடத்தியதில் சூர்யா 16 வயது சிறுமியுடன் தனிமையில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை சிறையில் அடைத்தனர்.













