இந்தியாவில் அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி; மத்திய சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன்;

0
279

கொரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு, மத்திய சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றை பிரதமர் மோடி மிகச்சரியாக கையாண்டார். ஒட்டுமொத்த நிலைமையையும் உன்னிப்பாகக் கண்காணித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றில் இடம்பெறுவார்.

ஜனவரி 8ம் தேதி முதல் பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் மாநில சுகாதார மந்திரிகள் நிலைமை குறித்து உரையாற்றி வருகின்றனர். பிரதமருடன் இணைந்து அனைத்து முதலமைச்சர்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுகின்றனர்.

மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு கொரோனா நிலவரத்தை கண்காணித்துக்கொண்டிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here