வண்ணாரப்பேட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்கள், மொபைல்போன்கள் மற்றும் தங்க நகை திருடியவர் கைது;

0
346

சென்னை, வண்ணாரப்பேட்டை, நரசய்யர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர், 48. கடந்த 17ம் தேதி இவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடு போனது.
அதேபோல் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் அலி ஆபிரகாம், 22. இவர், கடந்த 9ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தந்தையை பார்க்க வந்தபோது தன் இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திருந்தார். அந்த வாகனம் திருடு போனது.
நேற்று இரவு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ரிஸ்வானா என்றவர் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் விலை உயர்ந்த செல்போன்கள் தங்க கம்மல் ஹேண்ட் பேக் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளார்
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மதுரையை சேர்ந்த வீரப்பெருமாள், என்பது தெரியவந்தது.
இவர் இரு இடங்களிலும் பைக் மற்றும் வண்ணாரப்பேட்டை, ஏழுகிணறு பகுதியில் ஆறு மொபைல்போன்கள் மற்றும் தங்க கம்மல் திருடியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here