சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், ‘உழைப்பாளி’ என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்தா டாக்டர் வீரபாபு நேற்று துவக்கினார். ‘இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்’ என, அவர் அறிவித்துள்ளார்.
சென்னை மருத்துவ கல்லுாரியின் மூடநீக்கியல் துறை முன்னாள் இயக்குனர் அன்பழகன், பொது மருத்துவ டாக்டர்கள் விஜய், மணிகண்டன் ஆகியோர், அலோபதி சிகிச்சை அளிக்கின்றனர்.மருத்துவமனையில், தினமும் காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். சித்தா, அலோபதி என, இரண்டு சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் ஏழை, எளிய மக்கள் பெறலாம்.
டாக்டர்கள் அளிக்கும் பரிந்துரை சீட்டு அடிப்படையில், மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி கொள்ளலாம். சித்தா மருந்துகள், மருத்துவமனை வளாகத்திலேயே கிடைக்கும்.














