பயங்கர நிலநடுக்கம்.7.1 ரிக்டர் ; சுனாமி அலர்ட்:

0
6

ஜப்பான் நாட்டில் உள்ள குமமோட்டோ என்ற மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுக்கின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நில அதிர்வு வளையத்தில் அமைந்துள்ளது அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்றைய தினமும் கூட அப்படி தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்குள் ஜப்பானில் பதிவாகும் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். ஜூன் 25ஆம் தேதி வடக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here