வியாபாரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய”நாடார் பேரவை தலைவர் சௌந்தரராஜன் பேட்டி:

0
354

வடசென்னை தண்டையார் பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வியாபாரி பால்ராஜை இந்திய நாடார் பேரமைப்பு தலைவர் சௌந்தரபாண்டியன் சந்தித்து நலம் விசாரித்தார்

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்

நாடார் வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நினையில்

பெண்களை பாதுகாக்க காவல்துறை சார்பில் காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தியதை போல வியாபாரிகளை பாதுகாக்க அதே போன்ற ஒரு செயலி உருவாக்கப்பட வேண்டும் என்றும்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னராக மருத்துவர்களை சிலர் மருத்துவமனைகளின் தாக்கும் நிலை ஏற்ப்பட்ட போது அரசு அவர்களை காக்க தனிஓர் சட்டம் இயற்றியதைபோல்

நாடார் வியாபாரிகளை காக்கவும் ஓர் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும்”கூறினார்

மேலும் இது போன்ற வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும்பாலும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாவதே காரணமாக உள்ளது எனவே அதனை அரசூ தனிகவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்

விரைவில் தமிழக காவல்ஆணையரை சந்தித்து வியாபாரிகள் பாதுகாப்பு நலன் குறித்து கோரிக்கைவைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here