வேளாண் திருத்த சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என்ற தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று தண்டையார்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஆர்கே நகர் பகுதி தலைவர் அப்துல் ரசாக் தலைமையில் வடசென்னை மாவட்ட தலைவர் நஸ்ருதீன் மாவட்ட செயலாளர் நசீர் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அனிபா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது பேசிய ஹனிபா விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்துறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தாகவும் அதில் விவசாயிகள் தெளிவாக 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும் திரும்பப் பெறும்வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குடியரசு தினத்தன்று மிகப்பெரிய ஜனநாயக புரட்சியை ஏற்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார் இதனை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பதாகவும்
இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாய வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருப்பதாகவும் அதே போன்று தமிழகத்திலும் சட்டமன்றத்தில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்















