தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம்;

0
383

தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
காசிமேடு சூரிய நாராயண தெருவில் அமைந்திருக்கும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு திட்டம் ஒன்றை சார்ந்த தண்டையார்பேட்டை புதுவண்ணாரப்பேட்டை காசிமேடு பகுதிகளைச் சார்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதிய தொகையை ஏற்றி சம்பளத்தில் பாதியை தர வேண்டும் என்றும் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது கொடுக்கக்கூடிய தொகையை 10 இலட்ச ரூபாயாக ஏற்றி தர வேண்டும் என்று கோரி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அடுத்த மாதத்தில் தமிழக அளவில் ஒட்டுமொத்த அங்கன்வாடி ஊழியர்கள் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்
மேலும் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள கர்நாடகா போன்ற மாநிலங்களில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவுப் பொருட்களை ஒரே இடத்தில் மொத்தமாக தயார் செய்து பேக்கிங்கில் கொடுக்கக்கூடிய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழகத்தில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்றும் அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் போது குழந்தைகளுக்கு தற்போது வழங்கிவரும் சத்தான உணவிற்கு பதிலாக பேக்கிங்கில் வரக்கூடிய உணவில் பலப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் கெமிக்கல் குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் கூடும் என்றும் இதனால் அங்கன்வாடியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கும் வேலை இழப்பு நேரிடக் கூடும் என்றும் இதனால் அத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்றும் அதற்காகவும் போராடுவதாகவும் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here