தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 2500ரூபாய் கூடிய தொகுப்பினை இன்று தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலைல முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது
அதன்படி வடசென்னையில் ராயபுரம், ஆர்கே நகர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகையினை வழங்கி வருகின்றனர்
பொங்கல் பரிசு தொகுப்பினை பெற பொதுமக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு அதற்கான தேதிகளையும் குறிப்பிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகின்றன
அதன்படி இன்று காலை முதல் டோக்கன் அளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொரு நியாய விலை கடைகளில் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என்ற முறையில் முறையில் முழு அளவு கரும்பு ,அரிசி, முந்திரி போன்ற பொங்கல் தேவையான பொருட்கள் கூடிய தொகுப்பு மற்றும் 2500ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது
வட சென்னை முழுவதும் 953 நியாய விலைக் கடைகள் மூலம் 10 லட்சத்து 96 ஆயிரத்து 819 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை விநியோகப் பட்டு வருகிறது
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது இதற்காக காலை முதலே பொதுமக்கள் மாஸ்க் அணிந்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று செல்கின்றனர்















