வியாபாரிகள் தர்ணா போராட்டம்;

0
349

கொரோனா நோய் தொற்றினால் மாற்றப்பட்ட மார்க்கெட் பகுதியை பழைய இடத்திற்கு திரும்ப மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை திருவொற்றியூரில் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியில் கொரோனா நோய் தொற்றினால் எண்ணூர் விரைவு சாலையில் மார்க்கெட் அனைத்தும் மாற்றப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்தும் பழைய இடங்களில் விற்பனை மேற்கொள்வதற்காக வியாபாரிகள் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் மனு அளிக்க சென்றனர் மனுவை பெறுவதற்கு அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தினால் மனுவை வாங்க கோரியும் பழைய இடத்திற்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரியும் மண்டல அலுவலகம் முன்பு நுழைவுவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதிகாரிகள் வந்து மனுவை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து களைய போவதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன்பின்பு
மண்டல அதிகாரி தேவேந்திரன் வந்தபின்பு வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் மனுக்களை பெற்று கொண்டு மீண்டும் மார்க்கெட் பழைய இடத்தில் அமைப்பதற்கு அதிகரி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த பின்பு வியாபாரிகள் கலைந்து சென்றனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here