ரயில் நிலைய நடை பாதையில் கடை வைத்து தருவதாக பாஜக நிர்வாகி மோசடி;

0
173

ராயபுரம்,ஜூலை 4- ரயில் நிலைய நடைபாதையில் கடை வைத்து கொடுப்பதாக கூறி பணம் கொடுத்து ஏமாந்த விரக்தியில் ரஜினி மன்ற ரசிகை தூக்க மாத்திரைகள் விழுங்கி தற்கொலை முயன்ற வழக்கில் பா.ஜ.பிரமுகரை பிடித்து விசாரிக்கின்றனர்.தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் நவமணி(45). இவர் 2018ம் ஆண்டில் இருந்து ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.இவருக்கு பா.ஜ.,மகளிர் அணியை சேர்ந்த சுமதி என்பவருக்கு நவமணி நெருங்கி பழகினார். அப்போது, சுமதி மூலம், தண்டையார்பேட்டை, என்.எஸ்.கே தெருவை சேர்ந்த பா.ஜ வடசென்னை மாவட்ட செயலலார் செந்தில்குமார்(52) என்பவரின் அறிமுகம் கிடைதத்து. அப்போது, செந்தில்குமார் உதவியுடன், நான் கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைபபாதையில் 2 லட்சம் ரூபாய் உதவியுடன் நான் கடை வைத்துள்ளேன் என சுமதி கூறியுள்ளார். அதை நம்பி நவமணி ரயில் நிலைய நடைப்பாதையில் கடை வைத்து பிழைக்க செந்தில் குமாரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நவமணி கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னபடி கடை வைத்து தரவில்லை. இதனால் மகளிர் ஆணையம் மூலம் நவமணி புகார் அளித்தார். அப்போது செந்தில்குமார் 1 லட்சம் ரூபாய் தான் தர முடியும். மீதி பணம் குறித்து நான் கோர்ட் மூலம் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டார். மேலும் செந்தில்குமார் நவமணியை ஆபாசமாக திடீயுள்ளார். இதனால் மனமுடைந்த நவமணி தூக்க மாத்திரைகள் சாப்பிடும் மற்றும் ஆல் அவுட் திரவத்தை குடித்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தது தொடர்பாக செந்தில் குமாரை பிடித்து விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here