இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை ;

0
84

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை தீயணைப்பு துறையினர் வருவாய்த்துறையினர் இந்தியன் ஆயில் அதிகாரிகள் ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது

தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல், டீசல், மற்றும் விமானத்திற்கு தேவையான எரிபொருள் ஆகியவை கொண்டு செல்லும் இன் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது இங்கு இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்களை நிரப்பி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் விமான நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் குழாய் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அப்படி கொண்டுவரும்
ஆயில் குழாய்களில் திடீர் ஆயில் கசிந்து தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சி நேற்று காலை நடத்தப்பட்டது. அப்போது
ஆயில் குழாய்களில் கசிவு ஏற்பட்ட நிலையில் குழாயில் ஆயில் அனுப்புவதை நிறுத்திய பின்பு ஆயில் கசிவால் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர், எவ்வாறு துரிதர செயல்பட வேண்டும் என்பதை குறித்தும் உடன் மருத்துவத்துறையினர் மற்றும் மாவட்ட தொழில்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அனைத்து துறையினரும் உடனடியாக சம்பவ இன்று விரைந்து வந்து தீயை அணைக்க பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விபத்தில் சிக்கிய ஊழியர்களை முதலுதவி அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனைய தலைமை மேலாளர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி மனோ பிரசன்னா உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மருத்துவர்கள் வட்டாட்சியர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here