சிலம்பத்தில் ஓர் சவால் லிங்கம் சிலம்பம்பயிற்சி பள்ளி.

0
490

லிங்கம் சிலம்பம்பயிற்சி பள்ளி.
களம் ஒன்று,தாக்குதல் முறை பல ஆனால், முடிவு ஒன்று. சிலம்பத்தில் ஓர் பரபரப்பான சூழல் அதனை கட்டுக்கோப்பாக வழிநடத்தி சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி.
சோழங்கநல்லூர் ஸ்ரீஐயப்பா மெட்ரிக் பள்ளியில் கடந்த 24.05.2025,25.05.2025 சனிமற்றும் ,ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கிரிக்கெட்டில் நடைபெறுவது போல் “சேலஞ்சர் சீரிஸ்என்ற புதிய முறையிலான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டது.
முதலில் அணிகளும் அதன் உரிமையாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். சென்திங் தீவர்ஸ் அணியின் உரிமையாளராக சிலம்ப ஆசான் முனைவர் R.கார்த்திகேயன் அவர்களும்,ரைசிங்சன் கிரியேட்டரஸ் அணியின் உரிமையாளராக ஆசான் D.தயாநிதி அவர்களும்,சாம்பியன் நைட்ஸ் அணியின் உரிமையாளராக ஆசான் த.கார்த்திக் அவர்களும்,பயர் வாரியர்ஸ் அணியின் உரிமையாளராக தீயணைப்பு துறையில் பணியாற்றும் ஆசான் M.முரளிகிருக்ஷ்ணன் அவர்களும் பொறுப்பேற்றனர்.
முதல் நாள் அமர்வில் வீரர்-வீராங்கனைகளுக்கு சிலம்பத்தில் உள்ள பல்வேறு வகையான நுட்பங்களும், தற்காப்பு முறைகளும்,தீ தடுப்பு முறைகளும் செய் முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டது.
மாலை 4.00 மணியளவில் ஸ்ரீஐயப்பா பள்ளியில் உள்ள கரு.இந்திராதேவி உள் அரங்கில் லிங்கம் சிலம்பம் பயிற்சிபள்ளியின் ஆலோசகர் திரு,S.பெருமாள்சாமி அவர்கள் தலைமையில் நாண்கு அனி உரிமையாளர்கள் பங்கேற்ற ஏலமுறை விறு விறுப்பாக நடை பெற்றது.10-வயதிற்கு உட்பட்ட பிரிவு உட்பட ஆடவர்,மகளிர் என மொத்தம் ஒன்பது பிரிவுகளில் ஏலம் நடைபெற்றது. பெண்கள் பிரிவில் நித்தியஸ்ரீ 3160புள்ளிகள் மிகவும் அதிக ஏலத்தொகை பெற்றவராக இருந்தார். தலா 3120புள்ளிகள் ஏலத்தொகை பெற்றவர்களாக கிருத்திகா மற்றும் மேவியா ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆண்கள் பிரிவில் விக்னேஷ்வரன் 3020புள்ளிகள் ஏலத்தொகை பெற்று முதலிடம் பெற்றார்.
முதல்நாள் அமர்வு இத்துடன் முடிவு பெற்றது.
இரண்டாம் நாள் காலை 10.00மணியளவில் நான்கு உரிமையாளர்கள் அவரவர்களின் அணிகள் புடை சூழ களம் காண தயாராகினர். விறு விறுப்பாகவும் ஆர்பரிப்புடனும் களம் தீப்பொறி பறக்க வீரர்,வீராங்கனைகளின் போர் முழக்கம் களத்தில் நிகழ்ந்தது. சில நேரங்களில் நம்மை இருக்கையின் நுனிவரை கொண்டுவந்த நிகழ்வுகளும் மறக்க முடியாததாக திகழ்ந்தது. இறுதி கட்டம் மிகவும் தீ பொறிபறக்க இருந்தது. போட்டிகள் முடிவு பெறும் நேரத்தில் இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்றதால் மீண்டும் இரு போட்டிகள் நடத்தப்பெற்றதில் 16, புள்ளிகள் பெற்ற ரைசிங்சன் கிளாடியேட்டரஸ் அணி வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது. சிறு புள்ளிகள் வித்தியாசத்தில் இடண்டாவதாக கென்சிங் தீவர்ஸ் அணியும் ,மூன்றாவதாக சாம்பியன் நைட்ஸ் அணியும் நான்காவதாக பயர் வாரியர்ஸ் அனியும் திகழ்ந்தனர்.
மாலை4.00 மணியளவில் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் இயக்குனரும், ஸ்ரீஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதன்மை முதல்வருமான திரு R.சீனிவாசன்.M.SC.B ED அவர்களின்தலைமையில் பரிசளிப்புவிழா நடைபெற்றது. கலந்து கொண்ட வீரர்களை சிலம்ப பள்ளியின் ஆலோசர்களாக உள்ள க.நந்தகோபால் மற்றும் R .கமல கண்ணன் ஆகியோர் பாராட்டிட
வெற்றி பெற்ற அணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும்,லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆலோசகருமான க.தேசிங்.M A, M L. அவர்கள்,16-வெற்றிபுள்ளிகள் பெற்ற அணியான ரைசிங்சன் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு கோப்பையை வழங்கி பாராட்டுரை வழங்கினார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி முறைகளை உருவாக்கிய V.மகேந்திரன்.V.அதியமான் ஆகியோர் கொளரவிக்கப்பட்டனர்.
மேலும் போட்டியின் தலைமை நடுவர்களாக ஆசான்கள் M.சிகாமணி,சுரேஷ் குமார் ,மகேஸ்வரனும்,பக்க நடுவர்களாக ஆசான்கள் த. கருணாகரன்,V.விவேக் அவர்களும் அணித்தலைவர்களாக அஸ்வின் கார்த்திக், அனிதா கார்த்திக்,செ.சுவேதா,பவானி,கிருஷ்ணன் மற்றும் அஸ்வதி ஆகியோர் சிறப்பாக செயல் பட்டு இந்த சிறப்புமிகு போட்டி வெற்றி பெற செய்தவர்களாவர். நிறைவாக , இந்த சேலஞ்சர்ஸ் சீரிஸ் என்பது இவ்வாண்டு துவக்கம் தான் .அடுத்த ஆண்டு அதிகப்படியான அணிகளுடன் இன்னும் சிறப்பாக நடைபெறும் என கூறி, லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் தலைவர் க.தனபால் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here