அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு, நாளொன்றுக்கு ரூபாய் 131.14 காசு எப்போது வழங்கப்படும்? மீன்பிடி தடைகாலம் முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் திறந்த பிறகு தான் மீனவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா?
மத்திய, மாநில அரசுகள் இணைந்து கிழக்கு கடற்கரையில் 61நாட்கள் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடையின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய 14 கடலோர மாவட்டங்கள், பாண்டிச்சேரி, காரைக்கால் உட்பட 16 கடலோர மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய மீனவர் குடும்பங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ131.14 காசுகள் வழங்கப்படுகிறது.
மீன்பிடி தடைகாலமானது கடந்த ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 15ம் தேதி வரை நீடிக்கும், இந்த 61 நாட்களும் தமிழகத்தில் இருக்கக்கூடிய 14 கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய சுமார் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் நேரடியாக சுமார் 50லட்சம் மீனவர்களும், மறைமுகமாக சுமார் ஒரு கோடி மீனவர்கள் என 1கோடி 50லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழப்பார்கள். இந்த 1கோடி 50லட்சம் பேரில் குடும்பத்தில் மூத்த உறுப்பினரான 1லட்சத்து 79ஆயிரம் மீனவர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.
2020-2021ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி ரூ43717.26 கோடி மதிப்பிலான 11.49 லட்சம் மெட்ரிக் டன் கடல் பொருட்கள் ஏற்றுமதியின் மூலமாக தமிழக மீனவர்களால் 5,565.46 கோடி ரூபாய் அந்நிய செலவாணியாக ஈட்டு தரக்கூடிய தமிழக மீனவர்களுக்கு
தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி சுமார் 33 நாட்கள் ஆகியும் மீனவ குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கக்கூடிய 131.14காசு ஆகிய சொற்ப உதவி தொகையை கூட இன்று வரை மீனவ குடும்பத்துக்கு வழங்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை ஆனது உடனடியாக மீன்பிடி தடைகால உதவி தொகையை போர்க்கால அடிப்படையில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ.ரவி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
















