சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது தொடர்ந்து சென்னை காசிமேடு கடற்கரையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பின் படகில் சென்று கடலில் மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்
இட ஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு கவனமாக கையாள வேண்டும் என்ற அடிப்படையில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அறிக்கையை பொறுத்தே தமிழக அரசு செயல்படும் இதனால் பாமக கூட்டணியில் எந்த பிரச்சனையும் ஏற்படாது அவர்கள் தொடர்ந்து கூட்டணியில் இருப்பார்கள்
அதிமுக கட்சியில் குடும்ப அரசியல் கிடையாது இங்குதான் கொடி பிடிக்கும் தொண்டன் கூட முதல்வராக முடியும் ஆனால் திமுகவில் தத்தா பையன் பேரன் என்று வாரிசு அரசியல் செய்கின்றனர்
வாரிசுக்கு முக்கியத்துவம் குடுக்கிற கட்சி திமுகவில் தான்
எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் என்றும் இருப்பார்கள் நாளையும் இருப்பார்கள் தொடர்ந்து எப்போதும் இருப்பார்கள
தேர்தல் தேதி அறிவிக்கின்ற போது மெகா கூட்டணியோடு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும்
சீமான் வாங்கும் 3% வாக்கும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்
தமிழகம் வரும் பிஜேபி தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து அவர்கள் கட்சியினரை குஷிப்படுத்த ஆயிரம் கருத்துகளை தெரிவிப்பார்கள் அதற்கெல்லாம் நாங்கள் மதிப்பு அளிக்க முடியாது பிஜேபியின் நிலைபாடு குறித்து அதன தலைவர் ஜே பி நட்டா தான் அறிவிக்க வேண்டும்
தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தினர் மீது திமுக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு பொருளாதாரத்திலும் சமுதாயத்திலும் அரசியலிலும் உயரும் வகையில் செய்தது அதிமுகதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
















