அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.

0
6

அங்கீகாரம் இல்லாத லேஅவுட் க்கு பத்திரப்பதிவு செய்ததாக அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.

அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அங்கீகாரம் பெறாத லேஅவுட் / பிளாட்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வி.கங்கையமரன் என்பவர் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு SALE DEED தொடர்பாக விரிவான விளக்க மனுவை சமர்ப்பித்துள்ளார்

அந்த மனுவில் A.J.NAGAR என்ற பெயரில் சர்வே நம்பர் 348/1A1A1 மற்றும் 348/1B1A இல் பிளாட் நம்பர்ஸ் 7 மற்றும் 27 ஆகிய மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த லேஅவுட்டுக்கு டிடிசிபி / சிஎம்டிஏ அப்ரூவல் அல்லது பிளானிங் பெர்மிஷன் இருந்ததற்கான எந்த குறிப்பும் பத்திர ஆவணங்களிலும் வில்லங்கச் சான்றிலும் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “கிராம பஞ்சாயத்து எல்லை” என்ற குறிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டிருப்பது சட்ட ரீதியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

2016 முதல் அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் லேஅவுட் களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பதிவு செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மற்றும் பதிவுத்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், இந்த பதிவு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகி உள்ளது

மேலும் பதிவு செய்வதற்கு முன் DTCP Approval, Layout Sanction, Planning Permission, Land Classification Verification போன்றவை சரிபார்க்கப்பட்டுள்ளனவா என்றும் அந்த மனதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

இந்த விவகாரம் சாதாரண நடைமுறை தவறு அல்ல என்றும், பொதுமக்களை தவறாக வழி நடத்தக்கூடிய குற்றவியல் தன்மை கொண்ட செயலாக இருக்கக்கூடும் என்றும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்

இது குறித்து மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை ஐஜி, DTCP அதிகாரிகள், VIGILANCE மற்றும் ANTI CORRUPTION அதிகாரிகள் ஆகியோரிடமும் புகார் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here