மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு மாத உதவித்தொகையை 3ஆயிரம் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்;

0
342

தமிழகம் முழுவதும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக சென்னை தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் அதிகப்படியான ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் தனியார் துறைகளில் ஐந்து சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை தரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகினறர் இதற்காக பலமுறை துறை அதிகாரிகளிடம் மாநில அரசிடம் மனுக்கள் கொடுத்து எவ்வித பலனும் இல்லை என்றும் இதற்காக பல மாதங்களாக போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லாததால் இன்று வினோதமான முறையில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்திற்கு வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக குடும்பங்களோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் அங்கேயே தங்கி கேஸ் சிலிண்டர் அடுப்பு வைத்து சமையல் செய்து அரசு கோரிக்கை ஏற்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here